Author : canadatamilmovies

ஒக்டோபர் 30 முதல் ‘மனிதீ‘ – இலங்கை முழுவதும் வெளியீடு!

canadatamilmovies
TRM Pictures தயாரிப்பில் MJ நிதர்சன் இயக்கத்தில் AK கமல் ஒளிப்பதிவில் பத்மயன் சிவாவின் இசையமைப்பில் உருவான ‘மனிதீ‘ திரைப்படம், எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. EAP Films & Theaters வெளியீடாக இந்தப்படம் இலங்கை முழுவதும் காட்சிப்படுத்தப்படவுள்ளது. ரதிதரன், முரளி, விது வன்னி, மைதிலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்தத் திரைப்படம் கடந்த 11 ஆம் திகதி கனடாவில் திரையிடப்பட்டு......

பிரான்ஸில் பிரம்மாண்டமாகத் திரையிடப்பட்ட ‘கலங்கரை‘ திரைப்படம்!

canadatamilmovies
மன்மதன் பாஸ்கியின் எழுத்து இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ‘கலங்கரை‘ திரைப்படம் கடந்த 11 ஆம் திகதி பிரான்ஸில் சிறப்புத் திரையிடலாக திரையிடப்பட்டது. 1000 இருக்கைகள் கொண்ட பிரான்ஸின் முன்னணி திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தத் திரைப்படத்தைக் காண பெருவாரியான ஈழத்தமிழர்கள் திரையரங்கு நோக்கி வந்திருந்தார்கள். அரங்கு நிறைந்த காட்சியாக இப்படம் திரையிடப்பட்டமை படக்குழுவையும் நெகிழ்ச்சியடையைச் செய்துள்ளது. ஈழத்தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு பிரான்ஸில் கிடைத்திருக்கும் பெருவாரியான ஆதரவு, இத்துறை சார்ந்து பயணிக்கும் எம் கலைஞர்களுக்கு......

‘போராட்டம்‘ திரைப்படத்தின் முதல் சிறப்புத் திரையிடல்

canadatamilmovies
பாஸ்கரன் கந்தையா தயாரிப்பில் ராஜ் சிவராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘போராட்டம்‘ திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 2 ஆம் திகதி முதல் உலகளவில் வெளியாகவுள்ள நிலையில், முதல் சிறப்புத் திரையிடல் இன்று (27) கிளிநொச்சியில் இடம்பெறவுள்ளது. கிளிநொச்சி சேரன் திரையரங்கில் மாலை 06.30 மணிக்கு இந்த திரையிடல் இடம்பெறுகின்றது. இதற்கான ரிக்கெட்டுக்களை முற்பதிவு செய்து கொள்ளலாம். இதனைத் தொடர்ந்து இன்று கனடாவிலும் சிறப்புத் திரையிடல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. படத்தின் தயாரிப்பாளர் கந்தையா......

இன்று ‘இருமுகம்’ திரைப்பட சிறப்புத் திரையிடல்

canadatamilmovies
மட்டக்களப்பைச் சேர்ந்த கலைஞர்களால் முற்றுமுழுதாக உருவாக்கப்பட்ட ‘இருமுகம்’ திரைப்படம் இன்று (செப்டெம்பர் 27) மாலை 5.00 மணிக்கு, மட்டக்களப்பு தாழங்குடா PCA CineMax திரையரங்கில் திரையிடப்படுகிறது. கே. கிஷாந்த் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் ப.முரளிதரன், தனுஸ்கா ரமேஸ், பிரதிஜன், துஸி மயூரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘‘பாதையை அமைத்துவிட்டோம். வெற்றியைத் தீர்மானிப்பது நீங்கள்‘‘ என்ற கோஷத்துடன், திரையில் ‘இருமுகம்’ ஐ கண்டு களிக்க குடும்பம் குடும்பமாக அழைக்கின்றது படக்குழு....

‘TVK’ திரைப்படத்தின் ‘நெஞ்சானத்தி’ பாடல் வெளியானது

canadatamilmovies
பிரவீன் கிருஷ்ணராஜா (Praveen Krishnaraja) இயக்கத்தில் உருவாகி வரும் ‘TVK’ (தீயது வெல்லக்கேளீர்) திரைப்படத்தின் முதலாவது பாடலான ‘நெஞ்சானத்தி’, வெளியாகியுள்ளது. நேற்று இடம்பெற்ற பிரமாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டைத் தொடர்ந்து, இப்பாடல் @TrackMusicsIndia என்ற தளத்தில் வெளியாகியுள்ளது. ​இசை & பாடகர்: சகிஷ்ணா சேவியர் (Sagishna Xavier) ​வரிகள்: பிரவீன் கிருஷ்ணராஜா (Praveen Krishnaraja) ​வரைகலை வீடியோ (Lyrical Video): அரவிந்த் ஸ்கைவால்கர் (Aravinth Skywalkar) ​ஒலிக் கலவை......

‘நிலம்‘ திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி செப்டெம்பர் 25 வெளியீடு

canadatamilmovies
யுக்தா புரொடக்சன்ஸ் தயாரிப்பில் கிரிஸ் மற்றும் கிங் கஜன் ஆகியோர் நடிக்கும் ‘நிலம்‘ திரைப்படத்தின் முன்னோட்டக்காட்சி (NILAM — First Glimpse) எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்தப்படத்தை சுரேஸ் கந்தசாமி இயக்குகின்றார். MUSIC – AROSH CAMILUS DOP – CHINTHAKA SOMAKEERTHY EDITOR – SINTHUJAN DI EXR STUDIO COLORIST & VFX – SINX FX MIXING – PRASHANTH......