TRM Pictures தயாரிப்பில் MJ நிதர்சன் இயக்கத்தில் AK கமல் ஒளிப்பதிவில் பத்மயன் சிவாவின் இசையமைப்பில் உருவான ‘மனிதீ‘ திரைப்படம், எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் இலங்கை முழுவதும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
EAP Films & Theaters வெளியீடாக இந்தப்படம் இலங்கை முழுவதும் காட்சிப்படுத்தப்படவுள்ளது.
ரதிதரன், முரளி, விது வன்னி, மைதிலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான இந்தத் திரைப்படம் கடந்த 11 ஆம் திகதி கனடாவில் திரையிடப்பட்டு மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
