Cinema News

பிரான்ஸில் பிரம்மாண்டமாகத் திரையிடப்பட்ட ‘கலங்கரை‘ திரைப்படம்!

மன்மதன் பாஸ்கியின் எழுத்து இயக்கத்தில் உருவாக்கப்பட்ட ‘கலங்கரை‘ திரைப்படம் கடந்த 11 ஆம் திகதி பிரான்ஸில் சிறப்புத் திரையிடலாக திரையிடப்பட்டது.

1000 இருக்கைகள் கொண்ட பிரான்ஸின் முன்னணி திரையரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தத் திரைப்படத்தைக் காண பெருவாரியான ஈழத்தமிழர்கள் திரையரங்கு நோக்கி வந்திருந்தார்கள்.

அரங்கு நிறைந்த காட்சியாக இப்படம் திரையிடப்பட்டமை படக்குழுவையும் நெகிழ்ச்சியடையைச் செய்துள்ளது.

ஈழத்தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு பிரான்ஸில் கிடைத்திருக்கும் பெருவாரியான ஆதரவு, இத்துறை சார்ந்து பயணிக்கும் எம் கலைஞர்களுக்கு பெரும் உந்துசக்தியாக அமைந்துள்ளது என்றால் மிகையாகாது.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக நம் நாட்டின் முன்னணி ஒளிப்பதிவாளர்களில் ஒருவரான ஏகே கமல் பணியாற்றியிருப்பதுடன், பிரபல இசையமைப்பாளர் இசைப்பிரியன் இசையமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தாயகம் மற்றும் பிரான்ஸில் படம்பிடிக்கப்பட்ட ‘கலங்கரை‘ திரைப்படம், பிரான்ஸ் முதல் திரையிடலில் பெற்ற வரவேற்பை அடுத்து புதிய திரையிடல்களுக்கான திகதியும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளன.

Related posts

‘போராட்டம்‘ திரைப்படத்தின் முதல் சிறப்புத் திரையிடல்

canadatamilmovies

இன்று ‘இருமுகம்’ திரைப்பட சிறப்புத் திரையிடல்

canadatamilmovies

ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் வீரம் உடையாது

canadatamilmovies

Leave a Comment