கர்ணன் படைப்பகம் தயாரிப்பிலும் Marathan boys Entertainment இணைத்தயாரிப்பிலும் சின்னராசா விண்ணிதன் இயக்கத்திலும் உருவாகியுள்ள ‘வீரம் உடையாது‘ திரைப்படம் எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் உங்கள் அருகில் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
இந்த திரைப்படத்திற்கு நெவில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருப்பதுடன், நிவேன் சந்திரசேகர் படத்தொகுப்பாளராகவும் துணை இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். பிரசாந்த் கிருஸ்ணபிள்ளை இசையமைத்துள்ளார்.
ஒப்பனை : Agal By-shaki
உதவி இயக்குனர் : Sivakumar Jathurshan
தயாரிப்பு முகாமையாளர் : Siva Thinesh
விளம்பர வடிவமைப்பாளர் : Rajeevan Thayaparan
சபேசன் சண்முகநாதன், ஊரெழு பகீ, பிரசன்னா பிரியதர்சன், ஜொனி அன்டன், எம்.ஜி.தேனு, எழிலிசா அழகநாயகம், கீர்த்தி, அன்டனி கிளாரன்ஸ், மதிசுதா, கிஜய் சுஜன், லக்கு Skl, ஜசி ரவிசந்திரன் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
திரையரங்க விபரம் மற்றும் திரையிடல் நேரம் என்பன விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
