Azonway Pictures தயாரிப்பில் செல்வின் தாஸ் நடிப்பில் கவாஸ்கர் காளியப்பன் இயக்கத்தில் உருவாகி பல சர்வதேச விருதுகளை வென்ற ‘கூத்தாடி‘ திரைப்படம் நாளை (18) அவுஸ்ரேலியாவில் திரையிடப்படுகின்றது.
இலங்கைத் தமிழ் சினிமாவின் சர்வதேசப் பயணத்தில் மற்றுமொரு முக்கிய நிகழ்வாக இந்தச் சிறப்புத் திரையிடல் இடம்பெறவுள்ளது.
இலங்கை தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் 25 திரையரங்குகளில் வெளியிடப்பட்ட ‘கூத்தாடி’ திரைப்படம், இரண்டு வாரங்கள் வெற்றிகரமாகத் திரையிடப்பட்டது.
தற்போது ஆஸ்திரேலிய திரைப்படச் சங்கத்தின் அனுசரணையில் ஆஸ்திரேலியாவிலும் திரையிடப்படவுள்ளது.
இந்தச் சிறப்புத் திரையிடலில் ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திகதி: ஒக்டோபர் 18, 2026 – ஞாயிற்றுக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: Auburn Reading Cinema, Australia
‘கூத்தாடி‘ திரைப்படத்தில் 12 வேடங்களில் அசத்திய நடிகர் செல்வின் தாஸூக்கு, அண்மையில் இடம்பெற்ற ‘குவியம் விருதுகள் 2026‘ நிகழ்வில் சிறப்பு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
நடிகர் செல்வின் தாஸ் சார்பில் இயக்குநர் லீ முரளி (க்ரே) இந்த விருதினைப் பெற்றுக் கொண்டார். இயக்குநரும் நடிகருமான தேவா அலோசியஸூடன் இணைந்து MISTER GLAM INTERNATIONAL 2025 மொடல் ஹரண் ரமின்ஷன் இந்த விருதினை வழங்கி வைத்தார்.
