Cinema News

ஆஸ்திரேலியாவில் திரையிடப்பட்ட ‘கூத்தாடி’ திரைப்படத்திற்கு ‘The Matrix’ தயாரிப்பாளர் Andrew Mason பாராட்டு

Azonway Pictures தயாரிப்பில், செல்வின் தாஸ் தயாரித்து 12 வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்த ‘கூத்தாடி’ திரைப்படத்தின் சிறப்புத் திரையிடல், ஒக்டோபர் 18ஆம் திகதி ஆஸ்திரேலியாவில் சிறப்பாக நடைபெற்றது.

ஆஸ்திரேலியத் தமிழ்த் திரைப்படச் சங்கத்தின் (TFAA) ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரைப்படக் கலைஞர்கள் மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இலங்கையில் இருந்து சென்ற அரசியல் பிரமுகரும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.ஐங்கரநேசனும் இந்த திரையிடலில் பங்கேற்றிருந்தார்.

குறிப்பாக, ஹொலிவுட்டின் புகழ்பெற்ற ‘The Matrix’, ‘Dark City’ மற்றும் ‘The Water Diviner’ உள்ளிட்ட திரைப்படங்களின் தயாரிப்புப் பணிகளில் பங்களித்த Andrew Mason, ‘கூத்தாடி’ திரைப்படத்தைப் பாராட்டியமை படக்குழுவிற்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

இலங்கைத் தமிழ் சினிமாவை சர்வதேச அரங்கிற்கு கொண்டு செல்லும் ‘கூத்தாடி‘ படக்குழுவின் பயணத்தில் இது மற்றுமொரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

Related posts

‘LOVE3’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா

canadatamilmovies

ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் திரையரங்குகளில் வீரம் உடையாது

canadatamilmovies

செல்வின் தாஸ் 12 வேடங்களில் அசத்திய ‘கூத்தாடி‘ – அவுஸ்ரேலியாவில் நாளை விசேட திரையிடல்!

canadatamilmovies

Leave a Comment